இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா!!
சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பெற்றோர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டாலும் கூட, தமது குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.