மாகாண எல்லையை கடக்க அனுமதி யாருக்கெல்லாம்??
மாகாண எல்லையை கடக்கக்கூடியவர்கள் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி,
- சுகாதார சேவை,
- பொலிஸார்,
- முப்படையினர்,
- அரச ஊழியர்களின் உத்தியோகப்பூர்வ பயணங்கள்,
- அத்தியாவசிய பொருள் விநியோகம்,
- மிக நெருக்கமான உறவினர்களின் மரண வீடு (ஆவணம் அவசியம்),
- துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வோர் (ஆவணம் அவசியம்)
ஆகியோருக்கே மாகாண எல்லையை கடக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.