குழந்தை பிறந்து 6 நாட்களின் பின் கொரோனாவால் உயிரிழந்த பெண்!!

கம்பஹா மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மகப்பேறுக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் குழந்தை பிரசவித்து 6 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதில் தெல்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

மேலும், பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *