பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 என திகதி குறிப்பிட்டு கையெழுத்திட்ட கோட்டாபய!!

தனது பதவி விலகல் கடிதத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கையெழுத்து இட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 என திகதி குறிப்பிட்டு நேற்று கையொப்பமிட்டுள்ளார் எனவும் அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் எனவும் தெரியவந்துள்ளது. அரச தலைவரின் பதவி விலகல் கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவர் அதை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் கோட்டாபய  Read More

Read more

காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்….. 6 காவல்துறையினர் படுகாயம் – பெண்கள்  உட்பட 9 பேர் கைது (காணொளி)!!

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர் அத்துருகிரிய பகுதிலேயே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது . இதன்போது, 6 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் பெண்கள்  உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போயிருந்த போதும், வரிசையில் காத்திருந்த மக்கள் எரிபொருள் கேட்டு குழப்பத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஆறு காவல்துறை உத்தியோகத்தர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக Read More

Read more

கொழும்பில் மீண்டும் போராடடம் – படையெடுக்கும் மக்கள்…… கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் போது பேரணில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த மே 9ஆம் திகதி குழுவொன்றால் தாக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாவதை நினைவு கூர்ந்தும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படாமையை கண்டித்தும் Read More

Read more

நிறுவப்பட்ட்து “ஆர்ப்பாட்ட செயலகம்”….. இலங்கையிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆலோசனை அறிக்கையை இரு நாட்களில் வெளியிடவுள்ளோம்!!

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 43 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பதாதைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரச தலைவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் இளைஞர்களால் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் நேற்று இரவு போராட்டக்காரர்களால் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இலங்கை வரலாற்றில் நீண்ட நாட்கள் Read More

Read more

கொழும்பில் மீண்டும் சற்று பதற்றம் ….. குவிக்கப்பட்டுள்ள காவல்படை!!

கொழும்பு ஆமர் வீதியில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எரிவாயு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில்   இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் எரிவாயு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு – ஆட்டுபட்டித்தெரு பகுதியிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More

Read more

ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்ட அமரகீர்த்தியின் பிரேத ப‌ரிசோதனை‌ அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!!

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையானதால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.   அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களிடையே சிக்கிக் கொண்டுள்ள நிலையில், தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடந்த 9 ஆம் திகதி மாலை சம்பவம் இடம்பெற்றதும் தகவல்கள் Read More

Read more

டொலர்களோ ரூபாய்களோ நாட்டில் இல்லை ‘ஹர்ஷ டி சில்வா’ அதிர்ச்சி தகவல்!!

தற்போது நாட்டில் டொலர்களோ ரூபாய்களோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.   இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டைக் ஆட்சி செய்யும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமான இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்ட அவர்,   ஹர்ஷ டி சில்வா  அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்கவும்   “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மத்திய வங்கியின் Read More

Read more

நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!!

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நேற்று (09) இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (மே – 12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.   அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை சற்றுமுன் அறிவித்துள்ளது.   இன்று நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் Read More

Read more

33 வீடுகள் உட்பட்ட மொத்தமாக 37 சொத்துக்கள் தீக்கிரையானகின….. முழுமையான விபரங்கள்!!!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான 33 வீடுகள் மொத்தமாக நேற்று இரவு எரிக்கப்பட்டன.   சில தனியார் சொத்துக்களும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காரணத்திற்காக எரிக்கப்பட்டன. மொத்தமாக எரிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் வருமாறு, 1. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூர்வீக மெதமுலனை இல்லம்.   2. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகல் இல்லம்.   3. புத்தளத்தில் சனத் நிஷாந்தவின் இல்லம்.   4. பண்டாரவளையில் ஜனக திஸ்ஸ Read More

Read more

அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் பல துப்பாக்கிச் சூடுகள்!!

அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அலரி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் சற்றுமுன் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில் அலரி மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   அலரி மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு மக்கள் பிரவேசிக்க முற்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் நீடிக்கும் நிலையில் துப்பாக்கிச் சூடு Read More

Read more