இயக்குநர் ‘லோகேஷூ’க்கு விலையுயர்ந்த “Lexus கார்” ஒன்றை பரிசளித்த ‘கமல்ஹாசன்’!!

‘விக்ரம்’ படம் வெற்றி பெற்றதை அடுத்து இயக்குநர் லோகேஷூக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் தான் ‘விக்ரம்’.

இப்படத்தில் நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விக்ரம்’ படம் கடந்த ஜுன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியான முதல் நாளிலேயே இப்படம் குறித்த விமர்சனம் தொடர்ந்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

‘விக்ரம்’ திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குளில் கூட்டம் அலை மோதுகிறது.

தற்போது,

விக்ரம் படம் வெளியான மூன்றே நாளில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த பீஸ்ட், அஜீத் நடித்த வலிமை ஆகியவை படங்களின் வசூல் செய்த சாதனையை ஆண்டவரின் ‘விக்ரம்’ படம் முறியடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

தரமான திரைப்படங்களை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை என்றும்,

‘விக்ரம்’ படத்தில் பின்னணியில் கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில்,

நடிகர் கமல்ஹாசன்,

‘விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு விலையுயர்ந்த Lexus Carயை பரிசாக வழங்கியுள்ளார்.

 

இது தொடர்பான ‘இயக்குநர் லோகேஷ் கனகராஜூ’ அவர்களின் உத்தியோகபூர்வ Twitter  பதிவை பார்வையிட இங்கே அழுத்துக………………….

 

தற்போது இது குறித்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *