நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!!
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நேற்று (09) இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (மே – 12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை சற்றுமுன் அறிவித்துள்ளது.
இன்று நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 4 பேர் காயமடைந்துள்ளதுடன்,
நீர்கொழும்பிலும் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவங்கள் காரணமாக கடந்த திங்கட்கிழமை (09/05/2022) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.