#Accident

LatestNewsTOP STORIES

பாரவூர்தி மோதியதில்….. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்!!

கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காலையில் பேருந்திற்காக  காத்திருந்த பெண் மீது பாரவூர்தியொன்று மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsTOP STORIESWorld

குடிபோதையில் விபத்து ஏற்படுத்திவிட்டு….. போலீசாரிடம் சீருடையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகை!!

குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகை காவ்யா தாபர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த பிரபல நடிகை காவ்யா தாபர். மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மார்க்கெட் ராஜா என்ற படத்திலும், இந்தியில் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே காரில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு Read More

Read More
LatestNewsTOP STORIES

5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகிய பாரிய தீ விபத்து!!

உடபுஸ்ஸலாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடபுஸ்ஸலாவ நகரத்தில் நேற்று (19) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன என்றும் உரிமையாளர்கள் கூறுகின்றனர். அதில், புடவைக் கடைகளும், பிளாஸ்டிக் கடைகளும் உள்ளடங்குவதாகவும், இதனால் ஏற்பட்ட சொத்து இழப்பு பல இலட்சங்களை தாண்டியுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தீ பற்றிய நேரத்தில் வேகமான காற்றும் வீசியதாலேயே இந்த கடைத் Read More

Read More
LatestNewsTOP STORIES

கடந்த வருடம் நாட்டில் வீதி விபத்துக்களில் சிக்கி இறந்தவர்களின் விபரங்கள் வெளியாகின!!

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற கோர வீதி விபத்துக்களில் சிக்கி 2470 பேர் பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர். இந்த தகவலை சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபரும், சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண(Ajith Rohana) தெரிவித்தார். கடந்த வருடத்தில் மாத்திரம் 22000 வாகன விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சுமார் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில், நாளொன்றிற்கு சுமார் 60 வாகன Read More

Read More
indiaLatestNewsTOP STORIESWorld

திருமண வீட்டில் கிணற்றில் தவறி வீழ்ந்த 13 பெண்கள் பலி!!

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் கிணற்றில் தவறி வீழ்ந்த 13 பெண்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் மாவட்டம், நெபுவா நவுராங்கியா பகுதியில் நேற்று (16) இரவு நடைபெற்ற திருமண நிகழ்வின் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த சில பெண்கள் அங்குள்ள கிணற்றின் மீது போடப்பட்டிருந்த மூடியின் மீது அமர்ந்திருந்தனர். அதிகளவிலான பாரம் தாங்காமல் இரவு 8.30 மணியளவில் கிணற்றின் இரும்பு மூடி உடைந்து வீழ்ந்ததில் நீரில் மூழ்கி Read More

Read More
LatestNewsTOP STORIES

வவுனியாவில் 03 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து…… இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!!

வவுனியா கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்து சம்பவம், இன்று காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் படுகாயமைடந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் காவல்துறையினர் Read More

Read More
LatestNewsTOP STORIES

50 அடி பள்ளத்தில் விழுந்த டிப்பர்….. ஒருவர் மரணம் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வத்துகாமம் – எல்கடுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (12) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வத்துகாமம் – எல்கடுவ வீதியில் பயணித்த டிப்பர் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனால், டிப்பரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சாரதி காயமடைந்துள்ள நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை வத்துகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.  

Read More
LatestNewsTOP STORIES

2 பிள்ளைகளின் தந்தை வீதியோரத்தில் மரணம்….. விபத்தா அல்லது கொலையா என காவல்துறை விசாரணையில்!!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் வயது-33 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று  காலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபர் தனது வீட்டில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார் Read More

Read More
LatestNewsTOP STORIES

புகையிரதத்தில் மோதுண்டது முச்சக்கரவண்டி….. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்ட முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் 10.45 மணியளவில் அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மருமகள் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். இவர்கள் காலியை பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி – பூஸா வெல்லப்பட பகுதி ரயில் கடவையூடாக கடந்த முச்சக்கர வண்டியை ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. ஒருவர் Read More

Read More
LatestNewsTOP STORIES

யாழ்ப்பாணம் வந்த வான் கட்டுப்பாட்டை இழந்து விபத்து!!

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வான் கொக்காவில் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்து குறித்து மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More