கிளிநொச்சி கோனாவில் பகுதியில் நடந்த கோர விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் பலி
கிளிநொச்சி கோனாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
இருசக்கர உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.