மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து….. ஐவர் மாயம்!!

திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் இழுவை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானநிலையில் படகோட்டி உட்பட ஐவர் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. “சஸ்மி துவா 02” என்ற இழுவைப்படகே ஆழ்கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக கவிழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி திருகோணமலையில் இருந்து குறித்த படகு புறப்பட்டு சென்றுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடுமாறு கடற்படையினருக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் Read More

Read more

இ.போ.ச பேருந்துடன் மோதியது கனரக வாகனம்….. ஆறு பேர் அவசர சிகிச்சையில்!!

திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக வாகன விபத்தொன்று இன்று (25/05/2022) இடம் பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ளனர். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் களனியை நோக்கி சென்ற கனரக வாகனமுமே இவ்வாறு மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சுவாமிமலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் Read More

Read more

சாவகச்சேரி காவல்துறை நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்படடை இழந்த பஸ் விபத்து!!

சாவகச்சேரியில் இடம்பெற்ற சிறிய ரக பேருந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறை நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்திலேயே இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், காவல் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான், வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Read more

கொடிகாமம் பகுதியில் வாகன விபத்து….. இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப் ரக வாகனமும் , யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் என Read More

Read more

மிருசுவிலில் ரயிலுடன் மோதுண்டது பட்டா ரக வாகனம்….. 12  வயது சிறுவன் மரணம் – இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன்  12  வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் வயது 45 மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் வயது 15 ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Read more

வான் ஒன்றுடன் மோதியது பாரவூர்தி….. சிறுவன் மரணம் – 07பேர் படுகாயம்!!

திருகோணமலை – புத்தளம் வீதியின் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு (19/04/2022) திருகோணமலையில் இருந்து ஹொரவ்பத்தானை நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வானில் பயணித்த 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் திருகோணமலை மற்றும் மகாதிவுல்வெவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read more

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் கொள்கலன் ரயிலுடன் பயணிகள் ரயில் மோதல்….. பெருமளவில் வீணாக வழிந்தோடும் டீசல்!!

ரம்புக்கன புகையிரத நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் டீசல் கொள்கலன் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரம்புக்கன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் கொள்கலன் ரயிலுடன் மற்றுமொரு ரயில் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பெருமளவிலான டீசல் வீணாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. டீசல் கொள்கலன் ரயில் நிறுத்தியிருந்த தண்டவாளத்தில் பயணிகளை ஏற்றி வந்த ரயிலை நிறுத்த முற்பட்ட போதே மோதி Read More

Read more

யாழ் நகரில் கொடூர விபத்து….. சம்பவ சிறுவன் இடத்திலேயே பலி!!

யாழ் நகரில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகவும் காலல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பயணித்த சிறுவன், வீதியில் Read More

Read more

‘DHL” நிறுவனத்தின் மிகப்பெரிய விமானம் அவசரமாக தரையிரகப்படுகையில் இரு துண்டாக உடைந்தது (காணொளி)!!

விமானம் ஒன்று அவசரமாக தரையிரக்கப்பட்டபோது உடைந்து இரண்டு துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டாரிகா தீவில் உள்ள ஹுவான் சாண்டா மரியா பன்னாட்டு விமான நிலையத்திற்கு டி.ஹெச்.எல் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஜெர்மனியிலிருந்து வந்தது. இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரையிரகப்பட்ட நிலையில் தரையில் மோதிய விமான இரு துண்டாக உடைந்தது. பின்னர் விமானம் தீப்பிடிக்க உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இது Read More

Read more

அச்சுவேலி வல்லை சந்தியில் இரு கார்கள் மோதி விபத்து!!

அச்சுவேலி வல்லை சந்தியில் சற்று முன்னர் இரு கார்கள் விபத்திற்குள்ளாகியுள்ளது.   இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் வல்லைப் பகுதியில் இருந்து அச்சுவேலிக்கு திரும்பும் சந்திக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது. வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காருக்கு பின்னால் வந்த கார் மோதுண்டே விபத்திற்குள்ளானதாக தெரியவந்துள்ளது. வல்லை வீதியில் முன்னால் சென்ற கார் சாரதிக்கு தொலைபேசி அழைப்பு வர அவர் தனது காரை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு தொலைபேசியில் கதைத்த போது பின்புறமாக வந்த கார் நிறுத்தி வைக்கப்பட்ட Read More

Read more