கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி….. கணவர் தலையில் கட்டையால் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதி – யாழில் சம்பவம்!!

 

கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால்

கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இச்சம்பவமானது யாழ் வலிகாமம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

 

இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்து கணவர் 05 லிற்றர் பெட்ரோலினை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.

 

இந்நிலையில்,

மனைவி வீட்டிற்கு அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரியை வரவழைத்து கணவனுக்கு தெரியாமல் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினை அதிகாரிக்கு கொடுத்துள்ளார்.

 

இதனையடுத்து,

கணவர் வீட்டில் வந்து பார்க்கையில் 10 நாட்டகளாக சேமித்த வத்திருந்த பெட்ரோலை காணவில்லை என அதிர்ச்சியுற்றார்.

 

இது தொடர்பில் மனைவியிடம் விசாரிக்கும்போது மனைவி உண்மையை சொல்லியுள்ளார்.

இதனால்

ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் தலையில் கட்டையால் தாக்கியுள்ளார்.

 

இதனையடுத்து,

அயலவர்கள் மனைவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

கணவரும் யாழில் உள்ள முக்கிய அலுவலகம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *