ஸ்கொட்லாந்தில் பத்திரிகைகளில், இன்றைய முதற்பக்க செய்திகளில் தமிழின படுகொயை சித்தரிக்கும் முழுப்பபக்க ஆக்கங்கள்!!
ஸ்கொட்லாந்தின் இரண்டு முன்னணி செய்தித்தாள்களின் இன்றைய ஞாயிறுபதிப்புகளிலும் தமிழின படுகொலையை சித்தரிக்கும் முழுப்பபக்க ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்மக்களை இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி ஒருவர் கிளாஸ்கோ நகரில் தங்கிநிற்கும் செய்தியை தாங்கிய ஆக்கங்கள் ஸ்கொட்லாந்தைத் தளமாககொண்டு வெளிவரும் தி ஹெரால்ட் மற்றும் தி நஷனல் ஆகிய முக்கிய பத்திரிகைகள் இன்றும் வெளியிட்டுள்ளன.
தி ஹெரால்ட் மற்றும் தி நஷனல் ஆகிய பத்திரிகைகளின் இன்றைய ஞாயிறுபதிப்புக்களிலும் தமிழ்மக்கள் படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறாமல் மரநடுகை இயக்கத்தை முன்னெடுப்பதான விமர்சன ஆக்கம் முழுப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கில்லிங் பீப்பிள்ஸ் பிளான்டிங் றீஸ் (killing people planting trees)
என்ற தலைப்பில் இந்த ஆக்கம் வெளிவந்துள்ளது. இந்த ஆக்கத்துடன் இணைக்கப்பட்ட பெரிய ஓவியத்தில் தமிழர் தாயக மண்ணில் படுகொலையுண்ட தமிழ்மக்களின் மண்டையோடுகள் மற்றும் எலும்புகள் காணப்படும் நிலையில் அந்த மண்ணின் மேற்பரப்பில் மீதாக மரங்களை நாட்டிவருவதான காட்சி சித்தரிக்கபட்டுள்ளது.
இன்று விடுமுறை நாள் என்பதால் இந்த இரண்டு பத்திரிகைகளில் வெளிவந்த ஆக்கங்களை அனேக ஸ்கொட்லாந்துவாசிகள் வாசித்திருப்பதாக நம்பப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கிநிற்கும் விடுதியின் வரவேற்புக்கூடத்துக்கு வினியோகிப்படும் செய்தித்தாள்களிலேயே இந்த ஆக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.