அடுத்த கட்டத்திற்கு செல்லும் விக்ரமின் ‘சியான் 60’ !!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சியான் 60’ படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
விக்ரம் – துருவ் விக்ரம் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்த ஒரு மாதமாக முழுவீச்சில் நடைபெற்று வந்த சியான் 60 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து இப்படத்தின் பின்னணி பணிகளை தொடங்க உள்ளனர். விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அப்டேட் வெளியாக உள்ளது.
இதன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து நடிகர் விக்ரம், அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கொல்கத்தா கிளம்பி சென்றார்.