கொழும்பு வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான 70 குழந்தைகள் பிறப்பு
கொழும்பு சொய்சா மகளிர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 70 குழந்தைகள் பிறந்துள்ளதாக குழந்தைகள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நளின் கமஹெதிகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் பிறந்த குழந்தைகளை தனித் தனியாகவும் பாதுகாப்பாகவும் கவனித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றுக்குள்ளான குழந்தைகளை பராமரிப்பதற்காக தனியே பிரிவு ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.