தளபதி 65 பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல், பாதியிலே நிறுத்தப்படுமா படப்பிடிப்பு!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டுள்ளது என புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தளபதி 65 பட ஷூட்டிங்கில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், ஜார்ஜியா நாட்டில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் திட்டமிட்டபடி விஜய்-65 திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்படுமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *