கடவுச்சீட்டுக்களை அவசரமாகவும் சிரமமின்றியும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை!!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மாவட்ட காரியாலயம் ஒன்றை இரத்தினபுரி நகரில் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட இரத்தினபுரி மாவட்ட இணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசாங்கத்திற்கும் மற்றும் குடிவரவு திணைக்களத்திற்கும் அ னுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் இக்காரியாலயத்தை அமைப்பதன் மூலம் கடவுச்சீட்டுக்களை பெற்று கொள்வதற்கு வசதியான இருக்கும்.

இம்மாவட்டத்தின் தூர பிரதேசங்களிலிருந்து கொழும்புக்குச் செல்வதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் அதிக செலவு, சிரமம், கால தாமதம் என்பவற்றை தவிர்த்துக்ெகாள்ளலாம்.

கடவுச்சீட்டுக்களை அவசரமாகவும் சிரமமின்றியும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இதற்கான முயற்சிகள் இதுவரை நடைபெறவில்லை என இரத்தினபுரி மாவட்டத்தின் அரசியல் சமூகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டி இக்காரியாலயத்தை இப்பிரதேசத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *