ஜூலையில் வலிமை First Look??
அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது, இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது.
அஜித் – எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை அடுத்த மாதம் படமாக்க உள்ளனர்.
இந்நிலையில், வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டரோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.