நியுயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து -குழந்தைகள் உட்பட 19 பேர் கருகி பலி (படங்கள்)

பிலடெல்பியாவில் நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சில தினங்களில், நியுயோர்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நியுயோர்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 19 மாடிகள் இருந்தன. நேற்று இந்த கட்டடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.

இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் கரும்புகை அதிக அளவில் இருந்ததாலும் தீயை அணைப்பது சிரமமாக இருந்துள்ளது. கடும் போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீவிபத்தில் 9 குழந்தைகள் உள்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 32 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *