வாடிக்கையாளர்களுக்கு லிற்றோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
வெளிப்புற பிரச்சினைகளே சந்தை விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக லங்கா லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
நாணயக் கடிதங்களை திறப்பது இப்போது எளிதானது.
ஆனால்,
அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இன்னும் சில சவால்கள் உள்ளன என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொள்வனவு கட்டளைகள் வருவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் நாட்டின் நிலையற்ற நிலை காரணமாக அடுத்த சில மாதங்கள் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
5 நாட்களுக்கு பொது விடுமுறைக்காக தமது விநியோகத்தை மூடுவதாக லிற்றோ அறிவித்தது.
இது பொது மக்களிடமிருந்து அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
டொலர் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் இலங்கையர்கள் பல மாதங்களாக எரிவாயு கொள்வனவுக்காக வரிசையில் நிற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.