CINEMAEntertainmentindiaLatestNewsWorld

புதிய சாதனை படைத்த ‘வலிமை’ மோஷன் போஸ்டர்!!

வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர்.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர்.
வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர்.

வலிமை படத்தின் Motion Poster ஐ பார்வையிட

அஜித்தின் ஸ்டைலிஷ் லுக், யுவன் சங்கர் ராஜாவின் மாஸான பின்னணி இசை என ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த மோஷன் போஸ்டர், தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியளவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக, அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் இருந்து வந்த நிலையில், தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் அந்த சாதனையை 14 மணிநேரத்தில் முறியடித்துள்ளது.
இதுவரை வலிமை மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 5.8 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *