வாகனங்களின் விலைகள் சடுதியாக வீழ்ச்சி….. உதிரிபாகங்கள், திருத்தல் மற்றும் பழுதுபார்த்தல் கட்டணங்கள் சடுதியாக உயர்வு!!
நாட்டில் தற்போது வாகனங்களின் விலைகள் சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் வாகனங்களின் இறக்குமதி தடைப்பட்டு இருந்தது இதனால் அதன் விலைகள் பலமடங்கு அதிகரித்தன.
இந்நிலையில்,
தற்போது வாகனத்தின் வட்டி வீதம் அதிகரித்தமை எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்ஜிகே தெரிவித்துள்ளார்.
எனினும்,
வாகனங்களின் விலை குறைவடைந்த போதிலும் உதிரிபாகங்கள், வாகன திருத்தல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.