திடீரென நடுவீதியில் பற்றியெரிந்த கார்!!
கொழும்பு − தெமட்டகொட மேம்பாலத்தில் கார் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதை கொழும்பு தீயணைப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காரில் தீ பரவியுள்ளமையினால், குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கார் முற்றாக எரிந்துள்ளதுடன் சேத விபரம் தொடர்பில் இதுவரையில் வெளியாகவில்லை.
இது தொடர்பான மேலதிக விபரங்கள், Twitter பதிவு மற்றும் காணொளிகளை பார்வையிட இங்கே…..