யாழில் மற்றுமொரு திருமண நிகழ்வில் பங்குபற்றியோர் தனிமைப்படுத்தலில்!!

குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர்  தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்றைய தினம் நடைபெற்ற திருமண நிகழ்விலேயே அனுமதிக்கு மேலதிகமாக பலர் கூடியுள்ளனர். இன்று குருநகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்துள்ளனர்.

அதனையடத்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தினர்.

நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு மேலதிகமாக அங்கு பலரும் ஒன்று கூடியதால் தனிமைப்படுத்தியதாக யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *