CINEMAEntertainmentindiaLatestNewsWorld

படையப்பா, தேவர் மகன் பட வாய்ப்புகளை தவறவிட்டது ஏன்? – நடிகை மீனா விளக்கம்!!

திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார்.
இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.
இவர் கைவசம், ரஜினியின் ‘அண்ணாத்த’, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
“எனக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது.
சினிமா பார்வையாளர்களின் மன நிலை தற்போது மாறி இருக்கிறது.
முன்பெல்லாம் கதாபாத்திரம் தனது இமேஜுக்கு பொருத்தமாக இருக்குமா? என்று யோசிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.
நாம் நடிப்பது ஒரு கதாபாத்திரம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவேதான் எதிர்மறை கதாபாத்திரம் உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். படையப்பா, தேவர் மகன் உள்பட பல வெற்றி படங்களை கால்ஷீட் பிரச்சினையால் தவற விட்டுள்ளேன். அது எனக்கு இப்போதும் வருத்தம் அளிக்கிறது.
அடிப்படையில் நான் ஒரு நடன கலைஞர்.
எனவே எனக்கு நடன காட்சிகளில் நடிக்க மிகவும் பிடிக்கும். பரதநாட்டிய கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆர்வம் இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை.” இவ்வாறு மீனா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *