சுமார் ரூ.600 கோடி வசூல்செய்து மாபெரும் சாதனை படைத்தது “கேஜிஎப் 2”!!
ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் ‘யாஷ்’ நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் ‘கேஜிஎப் 2’.
இதில்,
சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
இப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் சுமார் ரூ. 133 கோடி மேல் வசூல் செய்து சாதனை செய்திருந்தது.
‘கேஜிஎப் 2’ படம் இந்திய அளவிலும்,
உலக அளவிலும் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்த இந்தப் படம், வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்து வருகிறது.
இதன் மூலம்,
உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில், ‘பென்டாஸ்டிக் பீஸ்ட்: தி சீக்ரெட் ஆப் டம்பிள்டோர்’ படத்திற்கு அடுத்த படியாக
இரண்டாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,
பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ.600 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பொறுத்த வரை, கடந்த இரண்டு நாட்களில் சிறிது டிராப்ஸ் இருந்தாலும் மூன்றாவது நாளில் அசாதாரண வசூலை எட்டியுள்ளது.
மும்பையில் படத்தின் வசூலில் சிறிது சறுக்கல் இருந்தாலும், குஜராத் மற்றும் ஒடிசாவில் பெரும் வசூலை எட்டியுள்ளது.
இந்தியா முழுவதும் 6,500 திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கும் ‘கேஜிஎப் 2’ படம் இந்தியில் மட்டும் 4,000 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னையில்,
6 நாள் முடிவில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெறும் ரூ.36 லட்சம் வசூலிக்க கேஜிஎப்-2 5வது நாளில் சென்னையில் ரூ. 62 லட்சம் வசூலித்துள்ளது என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக கேஜிஎப் 2 சென்னையில் ரூ.3.61 கோடி வசூலித்துள்ளது.