உயிர்கள் வாழத் தகுதியான ஒரு கோள் பூமிக்கு 117 ஒளி ஆண்டுகள் தொலைவில்!!

இறந்துகொண்டிருக்கும் ஒரு சூரியனுக்கு அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழத் தகுதியான சாத்தியங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இது உறுதிசெய்யப்பட்டால், “ஓயிட் டார்ஃப்” (White Dwarf)என்று அழைக்கப்படும் அத்தகைய நட்சத்திரத்தை உயிர்கள் வாழும் சூழலைக் கொண்டுள்ள கோள் ஒன்று சுற்றிவருவது கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தக் கோள் நட்சத்திரத்தின் ”உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில்” (habitable zone) கண்டறியப்பட்டது. அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவிற்கு, மிகவும் குளிராகவோ அதிக வெப்பமாகவோ இருக்காது.

ராயல் அஸ்ட்ரானமிகல் சொசைட்டியின் மாதாந்திர அறிவிப்புகளில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ‘பேராசிரியர் ஜே ஃபரிஹி’ இந்த கணிப்பு வானியலாளர்களுக்கு முற்றிலும் புதியது என்று கூறியுள்ளார்.

ஒரு “ஓயிட் டார்ஃப்” நட்சத்திரத்தின் ‘உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில்’ இத்தகைய கோள் ஒன்று காணப்படுவது இதுவே முதல் முறை. இதனால் மற்றொரு உலகில், உயிர்கள் அதைச் சுற்றி வருவதற்கான வாய்ப்பு உள்ளது”  என்று அவர் பிபிசி நியூசிடம் கூறுகிறார்.

மிகப் பெரிய நட்சத்திரங்கள் இறக்கும் போது கருந்துளையாக மாறும் அதே வேளையில்,

நமது சூரியனைப் போன்ற சிறிய நட்சத்திரங்கள் ‘ஒயிட் டார்ஃப்’ (White Dwarf) ஆக மாறுகின்றன.

சிறிய நட்சத்திரங்கள் அணு எரிபொருளை முழுவதுமாகப் பயன்படுத்திய பின்னர் அவற்றின் வெளிப்புற அடுக்குகளை இழந்து ஒயிட் டார்ஃப்(White Dwarf) ஆகும்.

அதாவது,

இந்த நட்சத்திரங்கள், தாங்கள் எரியத் தேவையான அணு ஆற்றல் அனைத்தும் தீர்ந்து போன பின், ‘ஓயிட் டார்ஃப்’ ((White Dwarf – குறுமீன்) எனும் நிலையை அடையும்.

இவற்றை விண்மீனின் எச்சம் எனலாம்.

அவை பொதுவாக ஒரு கிரகத்தின் அளவு இருக்கும்.

இது முதலில் உருவாகும்போது நீல-வெள்ளை ஒளியை வெளியிடுகின்றன.

பூமியிலிருந்து 117 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்தக் கோளுக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இருக்கும் தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இருக்கும் தொலைவைவிட 60 மடங்கு குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

இப்படி ஒரு கோள் இருப்பதற்கான நேரடி ஆதாரங்கள் இந்த ஆராய்ச்சிக் குழுவிடம் இல்லை.

ஆனால்,

‘ஒயிர் டார்ஃப்'(White Dwarf) நட்சித்தரத்தின் உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தைச் சுற்றிவரும் 65 சந்திரன் அளவிலான விண்பொருட்களின் இயக்கங்கள் அப்படி ஒரு கோள் இருக்கலாம் என்று காட்டுகின்றன.

இந்த விண்பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே இருக்கும் தூரம் மாறாமல் இருக்கிறது.

அப்படியானால் அவை தங்களின் அருகில் இருக்கும் கோளின் ஈர்ப்பு விசையின் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளன என்று அறிய முடிகிறது.

“எங்கள் குழுவுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.

“இயக்கம் மிகவும் துல்லியமாக இருந்தது. நீங்கள் இத்தகைய விஷயங்களை உருவாக்க முடியாது” என்று பேராசிரியர் ஃபரிஹி கூறுகிறார்.

உயிர்கள் வாழக்கூடிய மண்டலம் என்பது,

ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும்.

இப்பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழலைக் கொண்டிருக்கும்.

 

எனவே,

உயிர்கள் வாழ இது உதவும்.

இது பெரும்பாலும் “கோல்டிலாக்ஸ் மண்டலம்”(Goldilocks zone) என்று குறிப்பிடப்படுகிறது.

நட்சத்திரத்திற்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும்.

அதிக தூரத்தில் இருந்தால் அந்தக் கோள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.

அதேசமயம் இந்த மண்டலத்தில் இருக்கும் தட்பவெப்ப நிலை, உயிர்கள் வாழ “மிகச் சரியாக” இருக்கும்.

“ஓயிட் டார்ஃப்” (White Dwarf) விண்மீன்களைச் சுற்றியுள்ள கோள்களின் நேரடி ஆதாரங்களை வானியலாளர்கள் தீவிரமாகத் தேடுவதற்கு இந்தக் கணிப்புகள் ஒரு தூண்டுதலாக செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *