13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட்து…. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்!!
ாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை உறுதிப்படுத்தினார்.
ஊரடங்கு சட்டம் மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும்
இந்த ஊரடங்கு காலப்பகுதியில் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்குமாறும் வீடுகளில் இருக்குமாறும் சுகாதார அமைச்சர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள குறித்த காலப்பகுதியை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.