CINEMAEntertainmentLatest

நண்பர்களுக்கு ஏமாற்றம்… சூரரைப் போற்று படத்தை பற்றி கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்

சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் சூரரைப்போற்று படத்தைப்பற்றி கேப்டன் கோபிநாத் நண்பர்களுக்கு ஏமாற்றம் என்று கூறியிருக்கிறார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பரான ஒரு படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவர் எழுதிய புத்தகத்தை வைத்து இப்படம் உருவாக்கப் பட்டது. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். ரியல் லைப் நெடுமாறன் கேப்டன் கோபிநாத் சூரரைப்போற்று படத்தை பற்றி நெகிழ்ச்சியாக கடந்த வாரம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் அவர் இப்போது மேலும் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “சூரரை போற்று படம் எனது வாழ்க்கையில் நடந்தவையாக சிம்பிளி பிளை புத்தகத்தில் கூறிப்பட்ட சம்பவங்களை அப்படியே காட்டவில்லையே என்று சில நண்பர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நான் அவர்களிடம் சொன்னேன் இது சினிமாவுக்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் ‘மசாலா’வுக்கு கீழே நல்ல இறைச்சி இருக்கிறது!” என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *