கே.எஸ்.ரவிக்குமார், விஜய்சேதுபதியால் தொடங்கிவைக்கப்பட்ட்து ஹன்சிகாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் அடுத்த படத்தை நடிகர் விஜய்சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்திருக்கிறார்.
சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படங்களை இயக்கியவர் விஜய் சந்தர்.
இவர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார்.
பிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் இவர் தயாரிக்கும் படத்தில், ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹன்சிகா தமிழில் நடிக்கும் படம் இது.

ஹன்சிகாவுடன் சந்தோஷ் பிரதாப், ஸ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர்.


மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
இப்படத்தை சபரி கிரீசன், சரவணன் ஆகியோர் இயக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கேமராவை இயக்க, விஜய் சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் முதல் காட்சியை இயக்கினார்.
