LatestNewsTOP STORIES

நீண்ட நாட்களின் பின்னர் பலியெடுத்த டெங்கு….. யாழில் 11 வயது மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த, 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் காய்ச்சலால் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021 (2022) ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில், பரீட்சை முடிவுக்காக காத்திருந்த மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *