க.பொ.த சாதாரண தர விண்ணப்பதாரிகள், பரீட்சை சான்றிதழ் பெற காத்திருப்போருக்கு MOE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
2021 ஆம் ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன ( L.M.D. Dharmasena) தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கடந்த ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில்,
விண்ணப்பங்களுக்கான இறுதி திகதியாக இம்மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) அல்லது www.onlineexams.gov.lk/eic அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி செயலி ஊடாக (Mobile App ‘Exams’) விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இருப்பினும்,
சான்றிதழ்களுக்கு இணையம் மற்றும் மின்னஞ்சல் ஊடாக விண்ணப்பிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
தேவையான சான்றிதழ்கள் வெளிவிவகார அமைச்சுக்கு அல்லது விண்ணப்பதாரரின் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.