சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிவிப்பு!
உக்ரைன் நாட்டில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் பொலனறுவை மற்றும் சிகிரிய இன்று மற்றும் நாளை செல்ல ஏற்பாடு செய்திருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
உக்ரைன் சுற்றுப்பயணிகள் குழு வருவதனால் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு பல சுற்றுலாத் தளங்களைப் பார்வையிட தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் பயணம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக பொலனறுவை மற்றும் சிகிரியா சுற்றுலாத் தளங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உக்ரைன் சுற்றுப்பயணிகள் குழு அடுத்ததாக தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய இடங்களை பார்வையிடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பொலன்னறுவை சுற்றுலா பகுதிகளான பராக்கிரமபாகு மாளிகை, தலதா முற்றம், சிவன் ஆலயம் இலக்கம் – 02, ரண்கொன் வெஹெர, லங்கா திலக விகாரை, கிரி விஹாரை மற்றும் கல் விகாரை ஆகிய பகுதிகளுக்கு இன்றைய தினம் உக்ரைன் சுற்றுலா குழுவினர் பயணங்களை மேற்கொள்ள இருந்தமை குறிப்பிடத்தக்கது.