கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள “Anonymous Hackers”….. தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட பரபரப்பு செய்தி!!

உலகின் மிக பயங்கரமான கணனி ஹக்கர்கள் அணி எனக் கூறப்படும் “எனோனிமஸ் அணியினர்” கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரச தலைவர்  14 நாட்களுக்குள் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அதிகாரங்களை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி செய்யவில்லை என்றால், ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து தகவல்களையும் வெளியிடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனோனிமஸ் என்ற இந்த அணியினர் உலகில் பிரபலமான தலைவர்கள் மறைத்து வைத்துள்ள சொத்துக்களை வெளியிட்ட அணியினர் என கருதப்படுகிறது.

பன்டோர ஆவணங்கள், பனாமா ஆவணங்கள், விக்கிலீக்ஸ் என கடந்த காலங்களில் உலகில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் தகவல்களை இந்த அணியினரே வெளியிட்டுள்ளனர்.

இந்த அணியினர் ஏற்கனவே உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய படையினரின் தகவல்கள், பெயர்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *