உணவுக்காக மரியாதையில்லாமல் பேசிய பயணியை….. வெளுத்து வாங்கிய விமான பணிப்பெண்!!
விமானத்தில் பயணம் செய்யும் ஒருவரிடம் விமான பணிப்பெண் ஒருவர் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி ஒன்று தற்போது தீயாய் பரவி வருகிறது.
டெல்லியில் இருந்து இஸ்தான்புல் செல்லும் விமானம் ஒன்றில் உணவு காரணமாக விமானத்தில் இச்சண்டை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குர்ப்ரீத் சிங் ஹான்ஸ் என்பவர் குறித்த வீடியோவை பகிர்ந்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீண்ட தூர விமான இருக்கைகளும் உணவு தேர்வு வசதியைக் கொண்டிருக்கும்.
ஆனால்,
அனைவராலும் அதை நிர்வகிக்க முடியாது.
சிலரால் மட்டுமே நிர்வகிக்க முடியும்.
அனைவருக்கும் உணவு தேர்வு தேவை.
அது தவறியதால் ஏற்பட்ட விளைவை இங்கே நான் காண்கிறேன்.
“ஒரு ஆண், பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை என் கண் முன்னே பார்க்கிறேன்” என்று அவர் சம்பவம் குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
பயணி ஒருவர் விமானத்தில் வேறு உணவு கேட்டு முரட்டுத்தனமான நடத்து கொண்டுள்ளார்.
இதனால்,
அப்பணிப்பெண்ணை அழ வைத்ததாக குற்றம் சாட்டுவதை அந்த வீடியோவில் காணலாம்.
அதன்பின்னர்,
உணவு தேர்வு குறித்து விளக்கம் அளித்துக்கொண்டிருந்த பெண் ஊழியர் விமானத்தில் ஏற்கனவே உணவுகள் ஏற்றப்பட்டுள்ளது.
அதில் இருந்து தான் உணவு பரிமாற முடியும் என்று சொல்லும் போதே பயணி குறுக்கிட்டு கடுமையாக பேசியிருக்கிறார்.
“நீங்கள் என்னை நோக்கி விரலைக் காட்டி என்னைக் கத்துகிறீர்கள். என் குழுவினர் உங்களுக்காக அழுகிறார்கள். தயவுசெய்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்” மீண்டும் அந்த ஊழியர் விளக்க முயற்சிக்கும்போது அது விவாதமாக மாறியுள்ளது.
இதை தடுக்க மற்றொரு பணியாளர் தலையிட்டு நிலைமையைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். “மன்னிக்கவும்,
ஆனால் நீங்கள் பணியாளர்களிடம் அப்படி பேச முடியாது.
நான் உங்கள் பேச்சை மரியாதையுடன் அமைதியாகக் கேட்கிறேன்,
ஆனால் நீங்கள் பணியாளர்களையும் மதிக்க வேண்டும்” என்று பயணியிடம் ஊழியர்கள் கூறுயிருக்கிறார்கள்.
இருப்பினும்,
விமானப் பணிப்பெண்ணை அந்த நபர் “வேலைக்காரி” என்று அழைத்துள்ளார்.
“நான் இந்த விமான நிறுவனத்தின் ஊழியர்.
உங்கள் வேலைக்காரி அல்ல” என்று பெண் ஊழியர் கூறியுள்ளார்.
பின்னர் மற்றொரு ஊழியர் அழைத்துக்கொண்டு போக சண்டை முடிவுக்கு வந்தது.