எல்லாரும் எதிர்பார்த்த அப்டேட்.. எல்சியு பற்றி லோகேஷ் போட்ட பதிவு..!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் தனெக்கென தனி ஸ்டைலில் திரைப்படம் எடுப்பவர். இவருக்கென தனி ஒரு சினிமாடிக் யூனிவர்சை உருவாக்கி வைத்துள்ளார். அதற்கு ரசிகர்கள் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என பெயரிட்டனர்.
இவ்வாறு இந்த LCU யூனிவர்ஸ் உருவாதற்கு முன் என்ன நடந்தது . இது எப்படி உருவானது என தெரிவிக்கும் வகையில் லோகேஷ் ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு சாப்டர் ஜீரோ என பெயரிட்டுள்ளார். தற்பொழுது இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் 1 ஷாட், 2 கதைகள் ,24 மணிநேரம் என இடம்பெற்றுள்ளது. இந்த குறும்படத்தின் நீளம் 10 நிமிடத்திற்குள் இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த குறும் படம் நெட்பிளிகஸில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.