தமிழர் பகுதியில் கோர விபத்து..! சம்பவ இடத்தில் இருவர் பலி
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் சொகுசு வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக ஹபரன காவல் துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(6) காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற சொகுசு வாகனம் ஒன்றும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமேந்து கலவையை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் சொகுசு வாகனத்தில் பயணித்த கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 47 வயதுடைய இருவர் பலியாகியுள்ளனர்.
கனரக வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், சொகுசு வாகனத்தில் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக வேகமும் சாரதிக்கான நித்திரை கலக்கமுமே விபத்துக்கான காரணம் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.