முகக்கவசம் குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல!!
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.
இதன்படி,
முகக்கவசம் அவசியமில்லை என்ற தீர்மானம் கடந்த 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இருப்பினும்,
குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் , இந்தத் தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.