தொடருந்து கட்டணங்கள் உயர்வு…… இரு மடங்கானது குறைந்தபட்ச கட்டணம்!!
நாளை( 22/07/2022) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி,
10 ரூபாவாக இருந்த 3 ஆம் வகுப்புக்கான குறைந்தபட்ச பயணக் கட்டணம்
20 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடருந்து கட்டணங்கள் மற்றும் பிற தொடருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு கடந்த மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக இலங்கை தொடருந்து திணைக்களத்தின் தொடர்ச்சியான நஷ்டம்
மேலும் அதிகரித்துள்ளதால் முறையான சேவையை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.