கொழும்பில் பதற்றம்….. மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!!
கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாணவர் பேரணியானது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம பகுதிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே,
பெருந்திரளான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களில் சிலர் கோட்டா கோ கமவில் உள்ள நூலகத்திற்கு சில புத்தகங்களை கையளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.