கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்குகளின் விலை சுட்டெண்களும் திடீரென அதிகரிப்பு!!
கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்குகளின் விலை சுட்டெண்களும் நேற்றைய தினம் 399.81 வீதம் என்ற மிகப் பெரியளவில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.
இது பங்குச் சந்தையின் வரலாற்றில் ஒரே நாளில் அனைத்து பங்குகளின் விலை குறியீடுகளும் பாரியளவில் அதிகரித்த முதல் சந்தர்ப்பமாகும்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் விலை குறியீடுகளும் 332.18 புள்ளிகளாக அதிகரித்தது.
இது இதற்கு முன்னதான சாதனையாகும்.
இதனடிப்படையில்,
அனைத்து பங்கு பரிமாற்றங்களின் பின்னர் பங்குகளின் விலை குறியீடுகளும் 12 ஆயிரத்து 625.82 ஆக பதிவாகியதுடன் முழுமையான பரிமாற்றங்கள் 3.27 வீதமாக அதிகரித்து காணப்பட்டது.
இதனிடையே,
எஸ் மற்றும் பி. எஸ்.எல். குறியீடுகள் இன்று காலை 114.99 வீதமாக அதிகரித்ததுடன் நாள் முடிவில் அது 4 ஆயிரத்து 348.24 பதிவாகியது.
நேற்றைய தினம் 9.63 பில்லியன் ரூபாய் பங்கு பரிமாற்றங்கள் பதிவாகின.