கனடாவை சேர்ந்த சேர்ந்த 21 வயது பெண்ணின் மரணத்திற்கு இது தான் காரணமாம்!!
எட்மண்டனைச் சேர்ந்த 21 வயது பெண்ணான இவர் கடந்த 28ஆம் திகதி இறுதியாக எட்மண்டனின் மேற்கு முனையில் உள்ள பெல்மீட் சுற்றுப்புற பகுதியில் இருந்ததாக கூறப்படுகின்றது.
McKinney வீட்டில் இருந்து வெளியே சென்ற போது எட்மண்டனில் கடுமையான குளிர் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அந்த வேளை,
அவர் வானிலைக்கு ஏற்றவாறு ஆடை அணியவில்லை என்றும் அவரது பணப்பை, தொலைபேசி ஆகியவற்றை வீட்டிலேயே விட்டுச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
McKinney காணாமல் போன சமயத்தில் அப்பகுதியில் குளிர் காற்றானது 95F ஆக இருந்துள்ளது.
இந்த நிலையில்,
அவர் கடந்த ஞாயிறு அன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கனடா – எட்மண்டனின் மேற்கு முனையில் உள்ள பெல்மீட் சுற்றுப்புற பகுதியில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட Davinia McKinney என்பவரது மரணம் கடுமையான குளிர் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை அவர் மரணத்தில் குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என கூறியுள்ளது.