மொராக்கோவில் 6.8 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. இதுவரையில் 300 பேர் வரை பலி!!

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் மத்திய பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 300 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன்,

சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்…………

உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (22:11 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மராகேஷுக்கு தென்மேற்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ள

ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வெடிப்புக்குள்ளான தெருக்களின் காணொளிகளை வைரலாக பரவி வருகின்றன.

காணொளிகளை பார்வையிட இங்கே சொடக்குங்கள்……….

அத்துடன் பொதுமக்கள் பதற்றத்துடன் வீதிகளில் ஓடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளபட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *