காதலியுடன் சென்ற 17 வயது சிறுவனை 15 நாட்களாக காணவில்லை….. காதலியின் வாக்குமூலத்தில் சந்தேகிக்கும் உறவுகள்!!
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் கற்கை நெறியில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவனை கடந்த 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தனது 21 வயது காதலியுடன் கடற்கரைக்கு சென்ற போது அலையில் சிக்கியதாக மாணவனின் காதலி காவல்துறையிடம் கூறியபோதும் மாணவனின் உறவினர்கள் இது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதன்படி, காலி, வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவன் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். Read More