TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

காரில் இருந்து குடித்த பெண்கள் – தட்டி கேட்ட போலீஸ் அதிகாரி….. அடித்த அடியில் வைத்தியசாலையில் அனுமதி!!

கிரிகோரி வீதிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (05/11/2023) நள்ளிரவு 12.00 மணியளவில் காரை நிறுத்தி மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படும் இரு பெண்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்கள் இருவரும் அதிக போதை காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் வசிக்கும் 30 Read More

Read More
EntertainmentLatestNewsTOP STORIES

விமான நிலையத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்!!

ஜெர்மனின் ஹம்பர்க்(Hamburg) நகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவரால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. காரில் வந்த குறித்த இனம்தெரியாத நபர் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளார். தனது கையில் ஒரு துப்பாக்கியுடன் வந்திருந்த இவர் வானை நோக்கி 2 முறை சுட்டதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தினை நோக்கி ஓடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மனைவியை அடித்து கொன்றுவிட்டு….. தானும் துக்கிட்டு உயிரை மாய்த்த கணவன்!!

களுத்துறை மாவட்டம் அளுத்கம – தன்வத்தகொட பகுதியில் மனைவியை அடித்துக் கொன்றவர் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம்(04/11/2023) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில் கணவன் அடித்துள்ளார். இதனால், பலத்த காயம் அடைந்த மனைவி கீழே விழுந்ததையடுத்து கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், விசாரணையில் இருவரும் நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் முரண்பட்டு வந்துள்ளமை தெரியவந்ததுள்ளது. Read More

Read More
FEATUREDNewsSportsTOP STORIES

அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் யாழ் இளைஞனுடையது….. முழுமையான விபரங்கள்!!

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட யாழ். இளைஞனின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று(05/11/2023) மதியம் நண்பர்களுடன் இணைந்து வெளியில் சென்றிருந்ததாகவும் இந்தநிலையிலேயே இன்றையதினம்(06/11/2023) குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்படுகின்றது. முகத்திலும் உடலிலும் அடிகாயங்களுடன்….. வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்!!

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

முகத்திலும் உடலிலும் அடிகாயங்களுடன்….. வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்!!

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு சம்பவம் நேற்று(05/11/2023) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா திருசாந் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாளை முதல் ‘அஸ்வசும வாரம்’ ஆரம்பம்!!

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் கோரும் பணி வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என சமூக நலப் பலன்கள் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், முதற்கட்ட கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என அதன் நிர்வாக சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும், ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் இறுதியிலும் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அஸ்வசும விசேட வாரம் நாளை (06/11/2023) ஆரம்பமாகவுள்ளதாகவும் அந்த வாரத்தில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மாகாண மட்டத்தில் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம்….. கால அட்டவணை வெளியிட்டார் அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர்!!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று(01/11/2023) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார். அத்தோடு, 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நாளை(02/11/2023) ஆரம்பமாகவுள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (02/11/2023) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வரிப்படங்களிலிருந்து இஸ்ரேலினை நீக்கி பலஸ்தீன் மீதான தனது ஆதரவினை பகிரங்கமாக வெளிப்படுத்திய சீனா!!

அண்மையில் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல் – பலஸ்தீன் இடையேயான மோதல்களில் உலக நாடுகள் தத்தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் சீனாவும் பலஸ்தீன் மீதான தனது ஆதரவினை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தது. சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன. பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேசத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மீண்டும் ஆரம்பமானது காரைநகர் யாழ்(785/1) பேருந்து சேவை!!

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் 785/1 பேருந்து சேவை இன்று(01/11/2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும். கடந்த காலங்களில் காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர் – மூளாய் பிள்ளையார் கோவிலடி – டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி – வட்டுக்கோட்டை சந்தி – அராலி செட்டியார்மடம் ஊடாக இந்த பேருந்து Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பதவி நீக்கம்….. அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என கூறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், தமிழரசுக் கட்சியின் விவகாரத்தினை அந்தக் கட்சி சார்ந்தவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்ற கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், குறுகிய அரசியல் Read More

Read More