FEATUREDLatestNewsTOP STORIES

நாளை முதல் ‘அஸ்வசும வாரம்’ ஆரம்பம்!!

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் கோரும் பணி வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என சமூக நலப் பலன்கள் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும்,

முதற்கட்ட கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என அதன் நிர்வாக சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும்,

ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் இறுதியிலும் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வசும விசேட வாரம் நாளை (06/11/2023) ஆரம்பமாகவுள்ளதாகவும் அந்த வாரத்தில் பயன் திட்டத்தை முறைப்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவை செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்வசும விசேட வாரம் நவம்பர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ‘அஸ்வசும வாரம்’ ஒன்று நடைமுறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாத கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *