வரிப்படங்களிலிருந்து இஸ்ரேலினை நீக்கி பலஸ்தீன் மீதான தனது ஆதரவினை பகிரங்கமாக வெளிப்படுத்திய சீனா!!
அண்மையில் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல் – பலஸ்தீன் இடையேயான மோதல்களில் உலக நாடுகள் தத்தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன.
அந்த வரிசையில் சீனாவும் பலஸ்தீன் மீதான தனது ஆதரவினை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தது.
சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.
பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேசத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை.
லக்ஸம்பெர்க் உள்ளிட்ட சிறிய பகுதிகளுக்கே தெளிவான பெயர் குறிப்பு இருக்கும்போது இஸ்ரேலின் பெயர் இல்லை என்பது இஸ்ரேல் – பலஸ்தீன் மோதலின் விளைவு தான் இது என்பதை தெளிவாகவே புலப்படுத்துகிறது.
மேலும்,
சீனாவின் சமூக ஊடகங்களிலும் யூத எதிர்ப்பு வலுவாக பேசப்பட்டு வருகிறது.
அதில்,
ஜெர்மனி, யூதர்களுக்கு என்ன செய்ததோ அதையே இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு செய்து வருகிறது என சீனாவின் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்கையில்,
இது குறித்து அலிபாபா(Alibaba) மற்றும் பைடு ஆகிய நிறுவனங்கள் இதுவரை எந்த பதிலையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.