TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

மீளப்பெறுவதற்கு இனிமேல் சட்ட நடவடிக்கை….. இலங்கை வங்கிகள் சங்கம்!!

வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கையை (Parate Law) மேற்கொண்டு வருவதாக இலங்கை வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கான இறுதித் தெரிவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது. வைப்புத்தொகையாளர்களின் பணத்தைப் பாதுகாக்க வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடனாளிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பில் மேலும் அறிய கிடைத்தவை வருமாறு, வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

ஜப்பானில் வருடப்பிறப்பில் பாரிய நிலநடுக்கம் – 30+ மரணங்கள்….. இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கம் என எச்சரிக்கை!!

ஜப்பானில் நேற்று (01/01/2024) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 30 பேர் உயிரிழந்ததுடன் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 7.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததுடன் வீதிகள் பிளந்து கடுமையாக சேதம் அடைந்தன. அத்துடன், மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நேற்றைய புத்தாண்டு தினத்தில்(01/01/2024) இருந்து இன்று வரை அதிர்ந்து கொண்டே இருந்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மொத்தமாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்று முதல் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி!!

நாட்டில் இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டு வந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று (01/01/2024) முதல் VAT எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வரை 138 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவந்தது. எவ்வாறாயினும், அரச வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வற் திருத்தச் சட்டத்துக்கமைய, 15 வீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சிகரெட்டின் விலையும் அதிகரிப்பு!!

நாட்டில் இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5, 15, 20 மற்றும் 25 ரூபா ஆகிய விலைகளில் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று முதல் நாட்டில் பெறுமதி சேர் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டமை நடைமுறைக்கு வருவதனாலேயே சிகரெட்டின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

அரசாங்கம் பெறுமதிசேர் வரியை அதிகரித்துள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். மேலும், வற் வரி அதிகரிப்பின் காரணமாக வெதுப்பக தொழிற்துறையினரும், வெதுப்பக உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பாடசாலைப் போக்குவரத்து கட்டணம் பெப்ரவரி முதல் அதிகரிப்பு!!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலைப் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் குறித்து பாடசாலை ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று (01) முதல் புதிய வற் வரி திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக நிச்சயமாக பாடசாலைப் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்….. சினோபெக்கின் விலைகள் வெளியீடு!!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சினோபெக்) நிறுவனமும் தமது திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (01) முதல் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லீட்டருக்கு சினோபெக்கினால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளாவன, 92 ரக பெட்ரோல்  – 363 ரூபாய் ஓட்டோ டீசல்         –  355 ரூபாய் 95 ரக பெட்ரோல்  –  464 ரூபாய் சூப்பர் டீசல்  Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்….. 39784 வழக்குகள் இதுவரை பதிவு!!

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதனால் டெங்கு நோய் பரவும் ஆபத்து அதிகமுள்ள இடங்களை தொற்று நோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. அதன்படி, 71 அதிக ஆபத்துள்ள ஆரம்ப சுகாதார பிரிவிற்குரிய பகுதிகளை தொற்று நோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. இந்த பகுதிகளில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் மேல்மாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்தும் பகுதிகளில் சுமார் 39784 வழக்குகள் பதிவாகியுள்ளன இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமான எணிக்கையாகும். தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப் படி, Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாளை முதல் அதிகரிக்கிறது முச்சக்கர வண்டிகளின் கட்டணம்….. இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்!!

பெறுமதி சேர் வரியின் அதிகரிப்பின் பின்னணியில் முச்சக்கர வண்டிகளின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(01/01/2023) முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முச்சக்கர வண்டியில் பயணிக்கும் பயணிகளின் முதல் கிலோ மீற்றருக்கான விலையே அதிகரிக்கும் என முன்னர் அறிவித்திருந்து. இந்நிலையில், தற்போது முதல் கிலோ மீற்றருக்கான விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாது என்றும், இரண்டாவது Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

யாழ் மற்றும் கிளிநொச்சி இளம் பெண்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி விசாவைப்(Duplicate visa) பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையிலேயே விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பெண் 31 வயதுடையவர் எனவும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் 26 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து அனுமதிக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த Read More

Read More