இன்று முதல் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி!!
நாட்டில் இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டு வந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று (01/01/2024) முதல் VAT எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வரை 138 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவந்தது.
எவ்வாறாயினும்,
அரச வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வற் திருத்தச் சட்டத்துக்கமைய,
15 வீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் உணவுப் பொருட்களுக்கான விலை, போக்குவரத்து, தொலைபேசி சேவை உட்பட பல சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்படி,
இன்று(01/01/2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய,
இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 80 ரூபா கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக கொழும்பில் நேற்று (31/12/2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் லலித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
இன்று(01/01/2024) முதல் நடைமுறைப்படுத்தப்படும் வற் வரி திருத்தம் காரணமாக பேருந்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டியேற்படும் எனவும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.