சிகரெட்டின் விலையும் அதிகரிப்பு!!
நாட்டில் இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5, 15, 20 மற்றும் 25 ரூபா ஆகிய விலைகளில் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் நாட்டில் பெறுமதி சேர் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டமை நடைமுறைக்கு வருவதனாலேயே சிகரெட்டின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.