500 பேருந்துகள் வழங்கும் திட்டம்….. இரண்டாம் கட்டமாக இன்று கையளிக்கப்பட்டன 50 பேருந்துகள்!!

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப் புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் அதிபர் அலுவலகத்தில் இன்று (05/03/2023) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அடையாள ரீதியிலாக கையளிக்கப்பட்டன. இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஜனாதிபதியிடம் கையளித்தார். நாடாக்களை வெட்டி இரண்டு பேருந்துகளை திறந்து வைத்த ஜனாதிபதி இந்தியா கையளித்த பேருந்துகளைப் பார்வையிட்டார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன Read More

Read more

அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது உண்மையா….. குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்கள்!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ‘தடம்’, ‘மீகாமன்’, ‘கலகத்தலைவன்’ போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த Read More

Read more

படப்பிடிப்பில் பிரபல நடிகையின் மேக்கப் அறையில் திடீர் வெடிவிபத்து….. கவலைக்கிடமான நிலையில் நடிகை!!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் பிரபல நடிகை தீக்காயமடைந்துள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ஷர்மீன் அகீ[Sharmeen Akhee](வயது 27). இவர் ‘சின்சியர்லி யுவர்ஸ்‘, ‘டாக்கா’, ‘பைஷே ஸ்ரபோன்‘ மற்றும் ‘பாண்டினி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது, அவர் இருந்த மேக்கப் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு Read More

Read more

மரண அத்தாட்சிப் பத்திரத்தை வாழைப்பழச் சீப்புடன்….. காவிச் வந்த குரங்குகள்!!

மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை குரங்குகள் காவிச் சென்ற சம்பவம் ஒன்று அரனாயக ரஹல பிரதேசத் தில் இடம்பெற்றுள்ளது. தனது மனைவி இறந்ததற்கான மரண அத்தாட்சிப்பத்திரத்தை நபரொருவர் அரனாயக பிரதேச பிறப்பு இறப்பு பதிவாளரிடமிருந்து பெற்றுள்ளார். துவிச்சக்கர வண்டியில் வாழைப்பழச் சீப்பு ஒன்றை தொங்கவிட்டிருந்த பையில் மரண அத்தாட்சி பத்திரத்தையும் வைத்துக்கொண்டு சைக்கிளில் வீடு நோக்கி அவர் பயணித்துள்ளார். இடைவழியில், தனது நண்பர் வீடு ஒன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டதால் அவரது வீட்டின் முன்பாக சைக்கிளை Read More

Read more

தியேட்டர் கண்ணாடிகள் உடைப்பு….. ரசிகர்கள் படு காயம் – ஒருவர் உயிரிழப்பு!!

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் இன்று(11/01/2023) தியேட்டர்களில் வெளியானது. இதற்காக ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர்களில் குவித்து உற்சாகத்துடன் படத்தை வரவேற்றனர். இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் இயக்குனர்  வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை ஒட்டி இன்று(11/01/2023) அதிகாலை தியேட்டர்களில் வெளியானது. இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது. தியேட்டர்கள் முன்பு அசம்பாவிதங்களை தடுக்க நேற்று(10/01/2023) இரவு Read More

Read more

டிக்கெட்றிற்காக அலைமோதும் அஜித் ரசிகர்களை….. கட்டுப்படுத்த முடியாமல் விரட்டி அடிக்கும் போலீசார்!!

அஜித் குமார் நடித்து பொங்கல் திரை விருந்தாக துணிவு திரைப்படம் இன்று(11/01/2022) அதிகாலை 2 மணிக்கு வெளியானது. இந்தியாவின் புதுவையில் 13 திரையரங்குகள் இருந்தாலும் முன் அனுமதி பெற்ற திரையரங்குகளில் மட்டும் அதிகாலையில் படம் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், புதுவையில் சண்முகா, ரத்னா ஆகிய 2 திரையரங்குகளில் மட்டுமே படம் திரையிடப்பட்டது. முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறைந்த அளவிலேயே இருக்கைகள் கொண்ட சண்முகா திரையரங்கில் Read More

Read more

650 கோடி இந்திய ரூபா மதிப்பில்….. மதுரோடு முதல் மதவாச்சி வரை தொடருந்து பாதை பணிகள் ஆரம்பம்!!

இலங்கையின் வடபகுதியில் உள்ள 252 கிலோமீற்றர் தூர தொடருந்து பாதையை சீரமைக்கும் பணிகளுக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. பல ஆண்டுகள் பழமை வாழ்ந்த இந்த ரெயில் பாதை 81 மில்லியன் டொலர் (சுமார் ரூ.650 கோடி இந்திய ரூபா) மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. இலங்கையில் பல்வேறு தொடருந்து பாதை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இர்கான் இன்டர்நேஷனல்(Irqan International) என்ற இந்திய நிறுவனம்  இந்த பணிகளை மேற்கொள்கிறது. இதில் முதல்கட்டமாக மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான 43 கி.மீ. Read More

Read more

பூமிக்கடியில் புதைந்துகொண்டிருக்கும் இந்தியாவின் முக்கிய நகரம்!!

சீன எல்லையில் இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரம் ஒன்று பூமிக்கடியில் புதைந்துகொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த நகரத்தில் இருக்கும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருவதுடன், வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை அந்த பகுதியில் இருந்து வெளியேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் ஜோஷ்மித் நகரமே Read More

Read more

19KG கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் கூறிய காவல்துறை….. கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!!

19 கிலோ கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 30 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் தற்போது 11 கிலோ கஞ்சாவை மட்டுமே காவல்துறையினர் நீதிமன்றில் ஒப்படைத்தனர். இது குறித்து எழுத்துபூர்வமாக காவல்துறையினர் தெரிவித்தபோது பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. பழுதடைந்த கட்டடம் Read More

Read more

நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 190 பேரில்….. 70 பேர் வைத்தியசாலையில்!!

இந்தியாவின்  கேரளா மாநிலத்தின் மலப்பள்ளி மாவட்டத்தில் ஞானஸ்நான நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடந்துள்ளது. இதில், 190 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு கேட்டரிங் நிறுவனம் ஒன்று உணவு வினியோகம் செய்துள்ளது. இதனை சாப்பிட்ட அனைவரும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70 பேர், அதிக அளவில் வாந்தி எடுத்து வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளனர். அவர்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். எனினும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பருமலா Read More

Read more