வீட்டு கிணறு ஒன்றினுள் இருந்து பெட்ரோல் ஊற்று….. குறித்த பகுதியில் விசேட ஆய்வில் நிபுணர் குழு!!

வீடொன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெட்ரோல் ஊற்றெடுப்பது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறுமூடு ஆலந்தற பகுதியில் உள்ள சுகுமாரன் என்பவரின் வீட்டில் உள்ள கிணற்றில் இருந்தே தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்து வருகிறது. இவரின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுள்ளது. அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கிலிருந்து கசிந்து இந்த கிணற்றில் ஊற்றெடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. முறைப்பாட்டை அடுத்து வீட்டிற்கு வந்த எரிபொருள் நிலைய Read More

Read more

மணிப்பூர் சம்பவம் – மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை….. குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்!!

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு வீதியால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்  காணொளி எடுத்த நபரை கைதுசெய்துள்ள காவல்துறையினர் அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மணிப்பூரில் பழங்குடியினரான குகி இனப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதியால் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு தழுவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் 4 ஆம் திகதி தமது சமூகத்தை Read More

Read more

AI பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது பிரபல தனியார் தொலைக்காடசி!!

இந்தியாவின் ஒடிசா தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பெண் செய்தி வாசிப்பாளரை(Artificial Intelligence Female News Reader) அறிமுகம் செய்துள்ளது. லிசா(Lisa) என பெயரிடப்படவுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒடியா(Odia) மற்றும் ஆங்கிலம்(English) என இரு மொழிகளிலும் செய்திகளை வாசிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளிலும் செய்திகளை படிக்க முடியும் என்றும் ஒடியா மொழியை இன்னும் தெளிவாக வாசிக்க கற்றுக்கொடுக்க Read More

Read more

பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு….. இந்தியாவில் கொடுமை!!

இந்தியாவில் பழங்குடியினப் பெண்கள் இருவர் சாலையில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய `மைதேயி’ சமூக மக்கள், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென அரசை வலியுறுத்தி வருகின்றனர்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `குக்கி’ பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். இதில் ஒருவருக்கொருவர் மோதியதில், கலவரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி, முகாம்களில் உயிருக்கு பயந்துகொண்டு தஞ்சமடைந்தனர். இந்நிலையில், குக்கி சமூகத்தைச் Read More

Read more

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து வீதியை விட்டு விபத்து….. மாணவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியில்!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

கடல் பகுதியில் மணல்களை அகழ பயன்படும் கப்பலின் தோற்றத்தை ஒத்த கப்பல்…. மன்னாரில் கரைதட்டி ஒதுங்கியது!!

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் பாரிய கப்பல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை(07/07/20223) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில்  உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை இலங்கை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். குறித்த கப்பல் கடல் பகுதியில் காணப்படும் மணல்களை அகழ்வதற்காக பயன்படும் கப்பலின் தோற்றத்தை ஒத்ததாக காணப்படுகின்றது கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கப்பல் தரை தட்டியிருக்கலாம் என ஒரு புறம் சந்தேகிக்கப்படுகின்றது. இவ்வாறு Read More

Read more

இலங்கைக்கு நன்கொடையாக கிடைத்துள்ளது….. “உலகின் மிகவும் ஆபத்தான பறவை” என்று அறியப்படும் “Double Wattled Cassowary”!!

உலகின் மிகவும் ஆபத்தான பறவையினத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று பறவைகள் பெறப்பட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த பறவைகள் கொண்டுவரப்பட்டன. காசோவரி பறவை சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும் மற்றும் சுமார் 60 கிலோ எடை கொண்டது. Read More

Read more

“ஜப்பான்” படத்தின் புதிய Update கொடுத்த நடிகர் கார்த்தி!!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்‘, ‘நம்மவீட்டு பிள்ளை‘ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Read More

Read more

விராட் கோலியின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்புக்கள் மற்றும் அவரது வருமானங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலிக்கு தனி இடம் உண்டு. இன்ஸ்டாகிராமில் மட்டும் விராட் கோலியை 253 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள விராட் கோலி இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 7 கோடியை ஊதியமாக பெறுகிறார். அதே சமயத்தில், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு Read More

Read more

100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்தது….. சென்னை – யாழிற்கிடையிலான முதல் கப்பல்!!

சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்று(16/06/2023) காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது. சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா வரவேற்றார். சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியாக நேற்றிரவு(15/06/2023) சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பல் இன்று(16/06/2023) காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்போது, 25 கோடி ரூபா பெறுமதியில் அமைக்கப்பெற்ற காங்கேசன்துறை துறைமுக முனையத்தையும் அமைச்சர் நிமல் சிறீபாலடி Read More

Read more